Posts

Showing posts from February, 2019
மௌனம் தந்தாய், மொழியானேன்.. புன்னகை தந்தாய், புதிதானேன்... என்னுள் நீ பிறந்த நாள் அறிந்து என் வாழ் நாளின் அர்த்தம் தெரிந்தேன். விடைபெற நீ துணிந்தால், வினாவுடன் நான் மடிவேன்... விட்டுவிட்டு போவதென்றால், எனை வெட்டி விட்டு போய் விடு...💔💔
உயிர் என்று ஒன்று உண்டென்று உனை காணும் வரை நான் அறியேன்.... உயிரோடு வாழ்வதற்கு போராடி தோற்றுப போனேன்..💔💔💔
ரோஜாவின் வாசம்... இன்னும் பசுமையாய்... நான் கொடுத்த பூந்தொட்டி வெள்ளை மலர்கள் தந்து உன்னை ஏமாற்றிய போது, அதன் முட்களோடு போரிட்டு சிவப்பு ரோஜாவாக்கி தந்த எனக்கு கிடைத்த இதழ்களின் அன்பளிப்புகள் நம் நேசத்தின் உச்சம்...💞💞💞
வடிவங்களை மட்டுமே கொண்ட என் எழுத்துக்கள்,  உயிர் கொண்டது நீ வாசித்த பொழுது.🌷🌷